பாரம்பரிய நெல்லுக்கு பாதுகாப்பு தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவம்.

தன்னை ஒரு விவசாயியாகவே கருதி, தொடர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பாரம்பரிய நெல்லை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு விருதுகளை அளித்து மகிழ்ந்திருக்கிறார்.


வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். 

சென்னை மாவட்ட மக்களுக்கு வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக காய்கறி விதைகள், நுண்ணுயிர் உரங்கள் அடங்கிய காய்கறி தளைகள், அழகு மற்றும் தொட்டிச் செடிகள், இயற்கை உரங்கள், மதிப்பு கூட்டப்பட்ட தோட்டக்கலை பொருட்கள் போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்கிடும் வகையில் வேளாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்திடும் விதமாக, பாரம்பரிய முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் விவசாயிகளுக்கு ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது"‘ வழங்கப்படுகிறது. 

இவ்விருது பெறும் விருதாளர்களுக்கு முறையே 1 லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2019- _ 2020ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கான முதல் பரிசினை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 

என். சக்திபிரகதீஷ் அவர்களுக்கும், இரண்டாம் பரிசினை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த .எஸ். வேல்முருகன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசினை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உ. சிவராமன் அவர்களுக்கும் எடப்பாடியார் வழங்கி கௌரவித்தார்கள்.