பேரறிஞர் அண்ணாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ் மரியாதை

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி, திராவிடத்தை மலரச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் நாடாளுமன்றத்தில் திராவிடம் பற்றி பேசினார்.


நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப் படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராதிக்கோ எதிரானவனல்ல. நான் என்னை திராவிட இனத்தவன் என்று சொல்லிக்கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான - தெளிவான - மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சில அம்சங்கள் இருக்கின்றன. அதனால்தான் எங்களுக்கு சுய நிர்ணய உரிமையைக் கோருகிறோம் என்று பேசினார்.

அத்தகைய பெருந்தகைக்கு இன்று நினைவு தினம். இதனையொட்டி தமிழக முதல்வர் ட்வீட் போட்டிருக்கிறார். அதில், ‘தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன்.

நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன்‘ என்று கூறியிருக்கிறார்.