சமீபத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். யாருமே எதிர்பாராத வகையில் விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஒரு மெகா அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 12,110 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு அரசாணை ஓவர்... ரசீது வழங்கி சிறப்பித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்தவும், இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சொன்னதைச் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளிடம் ஆதரவு பெருகி வருகிறது.