செக்கிழுத்த செம்மலின் தேசப்பற்றுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருவணக்கம்.

இன்று, சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 84வது நினைவு தினம் அரசு சார்பில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சுதந்திரப்போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து பதிவிட்டுள்ளார்.


வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவு தினத்தை தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் இவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இன்று, சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.க்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், “ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார்.

செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.