ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. பிரமாண்ட விழா ஏற்பாடுகள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அற்புதமான வகையில் நினைவிடம் அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அந்த வகையில், நினைவிடம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.


இந்த திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்துவது குறித்து, இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அதோடு, ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சுமார் 80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடக் கட்டுமானத்தின் இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

வரும் 27ம் தேதி நடைபெறும் விழாவை எப்படி நடத்தவேண்டும் என்று, இதனை தேர்தல் வெற்றிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.