முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார்..!

தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) தண்ணீர் திறந்துவிடுமாறு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.


வேளாண் பெருங்குடி மக்களின் இந்த கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம், 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து 7.10.2020 முதல் 30 நாட்களுக்கு, 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதனால், தேனி மாவட்டம், 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன் வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.