நகரும் நியாய விலைக் கடைகள்! வீடு தேடி பொருள் வருது மக்களே..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

தமிழகத்தில் நகரும் நியாயவிலைக்கடைகள் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அதனை நிறைவேற்றும் வகையில், தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை திறப்பதற்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டது. இதன்படி, அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை திறக்க 9.66 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. 

இதன் மூலம் தமிழகத்தில் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்படும் நாள் மற்றும் இடம் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகள் தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வரும் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். வீடு தேடி பொருள் வருது மக்களே, வாங்குவதற்கு தயாராக இருங்கோ..