திருவள்ளுவருக்கு முதல் வணக்கம்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து. பிரதமர் மோடியும் வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது.


 இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவரது பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்தில், “முப்பாலில் முக்காலமும் உணர்த்திய தெய்வப்புலவர். உலகிற்கான பொதுமறையை தந்து தாய்த்தமிழின் அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற முதற்பாவலரான திருவள்ளுவர் பெருந்தகையின் தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பிரதமர் மோடியும் திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டி இருக்கிறார். தமிழின் பெருமையை உலகிற்கு உயர்த்திய தெய்வப் புலவரை நாமும் நினைவு கொள்வோம்.