மாற்றுத்திறனாளி பெண்ணின் மனுவை ஏற்று உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர் இபிஎஸ்! குவியும் பாராட்டுக்கள்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார்.


அந்த நேரத்தில் சாலையின் ஓரத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்காக நின்று கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டார்.

அந்த மனுவை பரிசீலித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உடனடியாக அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அவருடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.