பிக்பாஸ் மீரா கன்னத்தில் சேரன் மனைவி பளார்? நேரில் சந்தித்து பேசிய போது விபரீதம்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் இயக்குனர் சேரனைப் பற்றி அவதூறு பரப்பி வரும் நடிகை மீராவை இயக்குனர் சேரனின் மனைவி நேரில் சந்தித்து மிராவின் கன்னத்தில் பளார் என அறைந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன .


பிக் பாஸ் சீசன் 3 இல் கடந்த வாரம் நடிகை மீரா வெளியேற்றப்பட்டார் . இவர் இயக்குனர் சேரனின் மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைத்ததால் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு நடிகை மீரா மிதுன் அளித்த பேட்டி ஒன்றில் , பிக் பாஸ் சீசன் 3 தொடக்கம் முதலே இயக்குனர் சேரன் தன் மீது தனிப்பட்ட வெறுப்பு மற்றும் மனக்கசப்புடன் இருந்து வந்தார் எனவும் , மேலும் சாக்ஷி சிறையில் அடைக்கப்பட்ட போது இயக்குனர் சேரன் சாக்ஷி இடம் என்னைப் பற்றி தவறாக பேசி சாட்சியை  எனக்கு எதிராக செயல்பட வைத்தார்  எனவும் நடிகை மீரா இயக்குனர் சேரன் மீது குற்றம் சாட்டினார் . 

இதுபோல மீரா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் சேரனை பற்றிய தவறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் .

மீராவின் இந்த செயலால் கடுப்பான இயக்குனரின்  சேரனின் மனைவி நடிகை மீராவை நேரில் சந்தித்து அவரின் கன்னத்தில் பளார் என அறைந்ததாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன .

இணையதளத்தில் வெளியான இந்த தகவல் உண்மையா இல்லையா என்று ரசிகர்கள்  குழம்பி வருகின்றனர் .