இளம் நடிகை ஒட்டுத் துணி இல்லாமல் நடித்தார்! நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்! சொன்னது யார் தெரியுமா?

ராஜாவுக்கு செக் படத்தில் கதையின் முக்கியத்துவம் கருதி நிர்வாணமாக நடித்த பிரபல நடிகைக்கு இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


நடிகர் சேரன் மற்றும் நடிகை சிருஷ்டி நடிப்பில் கடந்த வாரம் ராஜாவுக்கு செக் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சிருஷ்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகை சிருஷ்டி இந்த திரைப்படத்தின் கதை மற்றும் காட்சியின் முக்கியத்துவத்தை ஏற்று ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார்.

நடிகை சிருஷ்டியின் துணிச்சலான நடிப்பை கண்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் நடிகை சிருஷ்டியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இயக்குனர் சேரன் ராஜாவுக்கு செக் படத்தில் நடிகை சிருஷ்டி கதை மற்றும் காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்து இருப்பார். ஒரு டவல் மட்டுமே மேலே இருக்கும். இந்த காட்சியில் நடிப்பதற்கு தைரியம் வேண்டும் எனவும் அவர் கொடுத்த ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எனவும் சேரன் அந்த பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் நடிகை அமலாபால் துணிச்சலாக நிர்வாணமாக நடித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.