பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று சர்ச்சைக்குரிய முறையில் பாதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவை , இயக்குனர் சேரன் நேரில் சந்தித்துள்ளார்.
ஒட்டு மொத்தமாக ஒதுக்கித் தள்ளிய பிக்பாஸ் குடும்பம்! ஆனால் மதுமிதாவை சந்தித்து நெகிழ வைத்த சேரன்..! என்ன செய்தார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சுவாரசியமாக பல்வேறு டாஸ்க்களில் பங்குபெற்று ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர் காமெடி நடிகை மதுமிதா ஆவார் . ஃபைனல் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை மதுமிதா இடையில் ஒரு விவகாரத்தில் காவிரிப் பிரச்சனை தொடர்பாக பேசினார் .
இதனால் மற்ற ஹவுஸ்மேட் களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்துடன் தன் கையை தானே அறுத்துக் கொண்டார் நடிகை மதுமிதா . இதனால் விதிமுறைகளை மீறிய நடிகை மதுமிதா பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .
பிக்பாஸ் போட்டி முடிந்த பின்பும் கூட சக போட்டியாளர்கள் யாரும் நடிகை மதுமிதாவை நேரில் சென்று பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .பிக் பாஸ் போட்டியாளர்களால் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டார் மதுமிதா இந்நிலையில் நடிகை மதுமிதாவுக்கு தொடக்கம் முதலே ஆதரவாக இருந்து வந்த இயக்குனர் சேரன் நடிகை மதுமிதா வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார் .
அங்கு நடிகை மதுமிதா மற்றும் அவரது கணவருடன் , இயக்குனர் சேரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக நடிகை மதுமிதா தனது ட்விட்டர் அக்கவுண்டில் , இயக்குனர் சேரன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தங்களின் வருகையால் எங்கள் இல்லம் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது என்று சேரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.