இரவு விருந்தில் மனைவிகள் யார் யாருக்கு? கார் சாவியை குலுக்கி போட்டு தேர்வு செய்யும் விநோத கலாச்சாரம்! சென்னை திகுதிகு!

கார் சாவிகளை குலுக்கி போட்டு மனைவிகளை ஜோடிகள் மாற்றி அனுபவிக்கும் அவலமானது சென்னையில் அரங்கேறி வருகிறது.


சில ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்கு கடற்கரை சாலை போன்ற வசதி வாய்ந்த இடங்களில் கார் சாவிகளை இளம்ஜோடிகள் குலுக்கி துணைகளை மாற்றிக்கொள்ளும் சமுதாய சீர்கேடுகள் அரங்கேறி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நவீன காலத்தில், டிஜிட்டல் மூலம் தங்களுடைய துணைகளை மாற்றிக் கொள்ளும் அவலம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.

"மீ வீ" என்றழைக்கப்படும் செயலியின் மூலம், இளம் ஜோடிகள் தங்களுடைய துணைகளை மாற்றி மகிழும் அவலத்தினை செய்து வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்ட ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் பரஸ்பர சந்திப்புகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதன் பின்னர் முழு ஒத்துழைப்புடன் என்னுடைய துணிகளை மாற்றிக்கொண்டு இளைஞர்கள் உல்லாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதற்கு தனியாக வாட்ஸ்அப்பில் ஒரு குழு உள்ளதாகவும், அந்த குழுவில் தங்களுடைய புகைப்படங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் முதலியவற்றை இளம் ஜோடிகள் பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது. அதன்மூலம் விருப்பமிருப்பவர்கள் தனக்கு வேண்டியவர்களை தேர்ந்தெடுத்து கொண்ட அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர்.

சென்னையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பிரபல தொழில் அதிபரும் அவருடைய மனைவியும் இத்தகைய அவலத்திற்கு துணை போவதாக தெரிய வருகிறது. வசதி படைத்தவர்கள் ரிசார்ட்டுகளிலும், வசதியற்றவர்கள் தங்களுடைய கார்களில் உல்லாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இளம்ஜோடிகள் எவ்வாறு சமுதாய சீர்கேட்டை நோக்கி அதை விரைவில் பயணித்து வருகின்றனர் என்பது இத்தகைய இச்சையின் மூலம் நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்கின்றனர் வயது மூத்தவர்கள்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.