25 நர்ஸ்கள் உடை மாற்றும் வீடியோ! அதிர வைத்த பிரைவேட் ஹாஸ்பிடல்!

சென்னையில் பிரைவேட் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள் உடை மாற்றும் போது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் பிரைவேட் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள் உடை மாற்றும் போது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   சைதாப்பேட்டையில் உள்ள இந்த பிரைவேட் மருத்துவமனை மிகவும் பிரபலமானது. தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏன் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் சிறுநீரக கற்கள் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற இங்கு ஏராளமானவர்கள் வருவது உண்டு. இந்த மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னர் சிவப்பிரகாசம் என்பவர் துப்புரவு பணிகளை மேற்பார்வை செய்யும் பணியில் சேர்ந்துள்ளார்.

   இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் தனது அறையில் அமர்ந்து செல்போனில் ஆபாசபடம் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நண்பர் அமல்ராஜ் என்பவரும் சிவப்பிரகாசத்துடன் சேர்ந்த ஆபாச படங்களை பார்த்திருக்கிறார். அந்த சமயத்தில் திடீரென பெண் ஊழியர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவர் வந்திருப்பது தெரியாமல் இருவரும் செல்போனில் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பெண் ஊழியர் செல்போனில் அப்படி என்ன மும்முரமாக பார்க்கிறார்கள் என்று பாரத்த போது அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்.

   ஏனென்றால் சிவப்பிரகாசமும், அமல்ராஜூம் பார்த்துக் கொண்டிருந்தது  அந்த ஹாஸ்பிடலில் நர்சுகள் உடை மாற்றும் வீடியோ. பொதுவாக நர்சுகள் வீட்டில் இருந்து வரும் போது சாதாரண உடையில் வருவதுண்டு. மருத்துவமனைக்கு வந்த பிறகு அவர்கள் நர்சுகளுக்கான பிரத்யேக உடைக்கு மாற வேண்டும். இதற்காக பிரைவேட் ஹாஸ்பிடலில் உடைமாற்றும் அறை உண்டு. அந்த அறையில் தான் நர்சுகள் 25 பேரும் உடை மாற்றுவது வழக்கம்.

   அங்கு தான் செல்போனை வைத்து சிவப்பிரகாசம் வீடியோ எடுத்துள்ளான். அதாவது துப்புரவு பணிகளை மேற்பார்வை செய்யும் வேலை என்பதால் சிவப்பிரகாசம் மருத்துவமனையின் எந்த அறைக்குள்ளும் செல்ல அனுமதி உண்டு. இதனை பயன்படுத்தி நர்சுகள் உடைமாற்றும அறைக்குள் செல்போனை வைத்து வீடியோ எடுத்துள்ளான் சிவப்பிரகாசம். இதனை பார்த்து அந்த பெண் ஊழியர் மருத்துவமனையின் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

   மேலாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் சிவப்பிரகாசம் மற்றும் அமல்ராஜையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் சிவப்பிரகாசம் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளான்.  போலீசாரிடம் சிவப்பிரகாசம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறைக்கு ஒருநாள் சென்றபோது நர்ஸ் ஒருவர் உடைமாற்றியதைப் பார்த்தேன். இதனால் எனக்கு சபலம் ஏற்பட்டது. 

   இதனை தொடர்ந்து நள்ளிரவில் அறையில் யாரும் இல்லாத போது எனது செல்போனை வைத்துவிட்டு வருவேன். மறு நாள் காலை யாரும் இல்லாத சமயத்தில் சென்று செல்போனை எடுத்து வருவேன். அதில் நர்சுகள் உடை மாற்றும் வீடியோ இருக்கும். அதனை தினமும் பார்த்து ரசிப்பேன். இதனை எனது நண்பர் அமல்ராஜிடம் கூறினேன். அவரும் வீடியோவை கேட்டதால் செல்போனில் பகிர்ந்தேன். இவ்வாறு சிவப்பிரகாசம் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

    இதனிடையே நர்சுகளின் வீடியோவை பதிவு செய்து அதனை அந்த நர்சுகளிடமே காட்டி ஆசைக்கு இணங்க வைக்க சிவப்பிரகாசமும், அமல் ராஜூம் முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஒரு நர்சிடம் இருவரும் வாலாட்ட அவர் கொடுத்த தகவலில் தான் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் மகளிர் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்த விடுதி உரிமையாளர் சிக்கினார்.

   இந்த நிலையில் பிரபலமான மருத்துவமனையில் நர்சுகள் வீடியோவை அங்கு பணியாற்றிய ஊழியரே செல்போன் கேமராவில் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சிவராஜின் செல்போனில் இருந்து வீடியோக்களை போலீசார் வழக்கு விசாரணைக்கு பதிவு எடுத்துக் கொண்ட அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் சிவப்பிரகாசம் வீட்டிலும் சோதனை நடத்தி வேறு வீடியோக்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்க உள்ளனர்.

   மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டால் அங்கு பணியாற்றும் நர்சுகளின் வாழ்வை கேள்விக்குறியாகும் என்பதால் தான் பிரைவேட் ஹாஸ்பிடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.