சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா..! கட்டுக்கு அடங்காமல் பரவும் நோய் தொற்று..! அதிர வைக்கும் காரணம்!

சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக பரவி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் நேற்று வரை 570 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இந்த பாதிப்பு 673ஆக அதிகரித்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் சென்னையில் புதிதாக 103 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தது.

அதிகபட்சமாக 20 பேர் அல்லது 30 பேருக்கு தான் கொரோனா இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 40 பேர், 50 பேர் என பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை இன்று 100ஐ தாண்டியுள்ளது.

இதற்கு காரணம் சென்னையில் மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்காதது தான் என்கிறார்கள். ஏனென்றால் மற்ற மாவட்டங்களில் மக்கள் தொகை குறைவு என்பதால் ஊரடங்கை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். ஆனால் சென்னை போன்ற பெருநகரில் அதிகாரிகளால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊரடங்கு நேரத்தில் சலூன் கடையை திறந்து முடிவெட்டிய ஒரு நபருக்கு கொரோனா உறுதியானது. இதே போல் கோயம்பேடு பூச்சந்தையில் ஒரு வியாபாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று போலீசாருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூலமாக கொரோனா வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது தான்.