கொரோனா தடுப்புகளை உடைத்து எறிந்த முஸ்லீம்கள்..! பணிந்து பாதை ஏற்படுத்திய போலீஸ்..? மண்ணடி பகீர்!

சென்னை மண்ணடி பகுதியில் கொரோனா பாதித்தவர் உள்ள பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டதால் நடந்து செல்லும் அளவிற்கு பாதையுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா பாதித்த சென்னை மண்ணடி M.K. Garden (மொப்பூஸ் கான் கார்டன்) தெருவில் சுகாதரத்துறை தடுப்புகளை உடைத்து சில முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மண்ண்டி M.K.Garden (மொப்பூஸ் கான் கார்டன்) பகுதியில் கொரோனா பாதித்துள்ளதால் அத்தெருவில் உள்ளவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளி நபர்கள்கள் உள்ளே சென்றுவிடாமல் இருக்கவும் மாநாகராட்சி சுகாதார பணியாளர்களால் தடுப்பு ஏற்ப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் எங்களுக்கு ரம்ஜான் நோன்பு முக்கியம், நாங்கள் வெளியே சென்று வருவோம் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த அமீன், ஜாபர், பரூக் தலைமையில் முஸ்லீம்கள் சிலர் அங்கு கூடி தடுப்புகளை உடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதனப்படுத்தி அப்பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் நடந்து வெளியே சென்று வரும் அழவிற்க்கு பாதையை ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டு சென்றனர்.

தடுப்புகள் அமைப்பதே யாரும் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லக்கூடாது என்பதற்கு தான் ஆனால் போலீசாரோ நடந்து செல்லும் வகையில் பாதை அமைத்துக் கொடுத்திருப்பதன் மூலம் கொரோனா வேறு இடங்களுக்கும் பரவும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.