இந்தியாவிலேயே பெண்களுக்கு இந்த விஷயத்தில் டாப் சென்னை தான்! பரபர ரிப்போர்ட்!

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக சென்னை விளங்குகிறது.


2015-2017 ஆண்டுகளுக்கான குற்றப்பதிவுகளின் புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான நகராக சென்னை விளங்குவதாகவும். பிற மாநிலங்களை காட்டிலும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாபெரும் நகரங்களில் பொருளாதார குற்றங்கள் சென்னையில் மிகவும் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. மேலும் கணினி வழி குற்றங்களான சைபர் கிரைம் குற்றங்களும் இங்கு மிகவும் குறைவான அளவிலேயே நடைபெற்றுள்ளது.

மிகவும் பயங்கரமான குற்றங்களும் சென்னையில் குறைவாகவே நடந்துள்ளதாகவும், பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் மிக மிக குறைவானதாகும், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை குற்றப்பிரிவு (ஐ.பி.சி) கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களில் ஹைதராபாத் நகரத்திற்கு அடுத்து சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியானது தமிழ்நாடு தலைநகரம் எவ்வாறு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.