சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா..! காரணம் ஒரே ஒரு தன்னார்வலர்! யார், எப்படி தெரியுமா? அதிர்ச்சி தகவல்!

சென்னையில் தன்னார்வலர் ஒருவரால் ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள விஆர் பிள்ளை தெருவில் சுமார் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள விஆர் பிள்ளை தெருவைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் ஆதரவற்றவர்கள், கொரோனா தடுப்பு பணியில் உள்ள போலீசார் உள்ளிட்டோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வந்துள்ளார். இதற்காக அவர் சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த தன்னார்வலருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அருகாமை வீட்டுக்காரர்கள், மற்றும் அவரிடம் உணவு பெற்று சாப்பிட்ட போலீசார், ஆதரவற்றோர் என பலரு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனை முடிவில் மொத்தம் 40 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இதனால் ஐஸ் அவுஸ் விஆர் பிள்ளை தெரு சீல் வைக்கப்பட்டு  முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பலமுறை எச்சரித்தும் தன்னார்வலர்கள் சுயகட்டுப்பாடு இல்லாமல் இப்படி நடந்து கொண்டதால் ஒரே ஒரு நபரால் ஒரு தெருவில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.