திடீரென இடிந்து விழுந்த 3வது மாடி பால்கனி..! இடிபாடுகளில் சிக்கிய கதறிய சிறுவர்கள்..! சென்னை பரபரப்பு!

சென்னையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 3வது மாடி பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் 3வது மாடியில் 3 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். நேற்று மாலை ஆறு மணி அளவில் அண்ணன் தம்பிகளான கவிராயன், பவித்ரன் என்பவர்களோடு அவர்களின் நண்பன் ஜீவா என்பவரும் விளையாடிக் கொண்டிருந்தார். 

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பழைய கட்டிடம் என்கிற நிலையில்திடீரென சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது பால்கனி அப்படியே இடிந்து விழுந்துள்ளது. இதனால் சிறுவர்கள் 3 பேரும் இடிபாடுகளுக்குஇடையே சிக்கிக் கொண்டனர். பால்கனி இடிந்து விழுந்ததால் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர் உறவினர்கள்.

அவர்கள் தலையில் காயத்துடன் அழுது கொண்டிருந்த சிறுவர்கள் மூன்று பேரையும் மருத்துவமனையில்அனுமதித்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பால்கனி இடிந்து விழுந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.