திருநாவுக்கரசர் ஒரு ஆபாச நபர்! சென்னை அண்ணா நகர் பெண்மணியின் பகீர் புகார்!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு எதிராக ஸ்ரீரங்கத்தில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக சென்னை அண்ண நகரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்ற பெண் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகே ஒரு தெருவில் திருநாவுக்கரசருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் ஒரு ஆபாசமான நபர் என்றும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீரங்கத்தை உள்ளடக்கிய தொகுதியில் இருந்து திருநாவுக்கரசர் போன்ற ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது. 

மேலும் திருநாவுக்கரசர் தோற்றால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புகளை துடைப்பதாக வேண்டிக் கொண்டிருப்பதாகவும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீரங்க காவல் நிலையத்தில் காங்கிரஸ் வழக்கறிஞரான சரவணன் அளித்த புகாரின் பேரில் அவதூறு பேச்சு, குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நர்மதாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

பெண் ஒருவர் எதற்காக திருநாவுக்கரசருக்கு எதிராக சென்னையில் இருந்து திருச்சி சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரித்த போது அந்த பெண்மணி திருநாவுக்கரசர் இருக்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.