சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் மளிகை, காய்கறிக்கடைகள் பூட்டப்படும்! மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை! ஏன் தெரியுமா?

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஐந்து மாநகராட்சிகளில் வரும் ஞாயிறு முதல் மளிகை, காய்கறிக்கடைகள் முழுவதுமாக மூடப்பட உள்ளன.


தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரம் நடவடிக்கையாக ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு வரும் ஞாயிறு முதல் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி சென்னை, கோவை மற்றும் மதுரையில் வரும் ஞாயிறு முதல் புதன்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு.

இதே போல் சேலம், திருப்பூரில் வரும் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நகரத்தில் உள்ளவர்கள் ஊரடங்கின் போது எந்த காரணத்திற்காகவும் வெளியே வரக்கூடாது. மருத்துவ அவசரம் என்றால் மட்டுமே மக்களுக்கு அனுமதி.

வழக்கமாக காலை முதல் பிற்பகல் வரை திறந்திருக்கும் மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகளும் கூட இந்த தினத்தில் இயங்காது. வீடு தேடி வரும் காய்கறி வாகனங்களில் மட்டுமே மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள முடியும். கொரோனா பரவல் தீவிரமானதால் தமிழக அரசு கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.