தற்கொலை முயற்சிக்கு முன்னர் கடைசியாக செல்போனில் பேசிய ஜெயஸ்ரீ! யாரிடம் என்ன பேசினார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்!

வாழபிடிக்கவில்லை என கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சென்னை திருவான்மியூரில் 2வது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார் தொலைக்காட்சி சீரியல் நடிகையான ஜெயஸ்ரீ. பழம்பெரும் நடிகையான லஷ்மிராவ் எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் பரதநாட்டிய கலைஞரும், நடன இயக்குநரும் ஆவார். இவரது மகள்தான் தற்போது தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீ ஆவார்.

இவரும் நடன ஆசிரியராக இருக்கிறார். சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்த ஜெயஸ்ரீக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளார். இவரை ஈஸ்வர் என்பவர் கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஈஸ்வருக்கும் மற்றொரு நடிகைக்கும் தொடர்பு என்ற பிரச்சனை உருவானது. இதனால் ஜெயஸ்ரீ, கமிஷனர் ஆபீஸ் சென்று ஈஸ்வர் மீது புகார் அளிக்க இந்த பிரச்சனை பூதாகரமானது.

இந்நிலையில் நேற்று ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த நண்பர்கள் நீலாங்கரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து ஜெயஸ்ரீயின் தாயார் நீலாங்கரை போலீசில் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் அளித்தார். 

இரண்டாவது நாளாக ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஜெயஸ்ரீ பையில் ஒரு கடிதம் கைப்பற்றினர். அதில், "ஹாய் ரேஷ்... எனக்கு என்னன்னு தெரியவில்லை ரொம்ப மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நான் ஒரு வேஸ்ட்...

நான் இருந்தும் பிரயோஜனம் இல்லை.. எனக்கு வாழ பிடிக்கல.. எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் தந்தாய் நீ. என்று எழுதியிருந்தார். கண்ணீருடன் ஜெயஸ்ரீ பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.