மதுரை கலெக்டரை உடனே மாற்றுங்கள்!தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் மையத்திற்குள் கடந்த வாரம் பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் அனுமதியின்றி நுழைந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மதுரை தொகுதி மார்க்சிஸ்ட்வேட்பாளர் சு வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரி சென்று வந்தது ஏற்கவே முடியாத குற்றம் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை உடனடியாக மாற்ற வேண்டும் எனுறம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை ஆட்சியரை மாற்றிவிட்டு வேறு ஒரு புதிய ஆட்சியரை உடனடியாக நியமிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிபதிகள் மணிக்குமார் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரையின் ஏஆர்ஓவையும் மாற்ற உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.