வெளியே சொல்ல முடியாத தொந்தரவு தருகிறார் கணவன்..! அதனால் தான் போலீஸ் எஸ்.ஐயுடன்..! சென்னை நர்மதா பகீர் தகவல்!

கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி கொலை மிரட்டல் விடுப்பதாக கணவனும், தனக்கு உதவியவருடன் இணைத்து பேசுவதாக மனைவியும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் சென்னை அசோக் நகரில் நடைபெற்றுள்ளது.


சென்னை அசோக் நகரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பர் கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நர்மதா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சென்னை கே.கே.நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருடன் தன்னுடைய மனைவிக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளதாகவும், இதை தட்டிக்கேட்ட தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஜனார்தனன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ராஜேசும், நர்மதாவும் தனிமையில் இருந்ததை பார்த்து தட்டிக் கேட்டதால் அவர் தன்னை தாக்கியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் ஒரு நிறுவனம் தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனார்தனன் அந்த நிறவனத்தை நர்மதா நடத்தி வருவதாகவும், 2 குழந்தைகளின் பெயரில் சொத்து எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் இதை மறுத்துள்ள அவரது மனைவி நர்மதா, ஜனார்த்தனனுக்கு சூதாடும் பழக்கம் இருந்ததால் அதில் பல லட்சம் ரூபாய் இழந்தார். அதனால் ஏற்பட்ட கடனை என்னுடைய பெற்றோர்தான் கொடுத்தனர். மேலும் கணவரின் சகோதரி கட்சி ஒன்றில் இருந்து கொண்டு கொடுத்த தவறான புகாரில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் ரவுடிகளை வைத்தும் என்னை மிரட்டினர். அந்த சமயத்தில் தனக்கு உதவி செய்தார் கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் தனக்கு உதவி செய்த ஒரே காரணத்திலேயே தன்மீது அவதூறாக பேசுகிறார் கணவர் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் பேசியபோது உண்மை நிலவரம் தெரியாமல் செய்திகள் வெளியானதால் மன உளைச்சலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.