செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தின் 37-வது மாவட்டமாக இன்று தோன்றியது.
உதயமாகியது செங்கல்பட்டு மாவட்டம்! நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார் இபிஎஸ்!
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே வேன்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் உள்ள மைதானத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
புதியதாக உருவாக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் துவங்கி வைத்தார்.
மேலும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது. அதுமட்டுமில்லாமல் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.