சமந்தாவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது ஏன்? கணவன் வெளியிட்ட டாப் சீக்ரெட்!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மிகவும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் இருவரும் சுமார் 8 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரின் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் இவர்கள் எப்போது பெற்றோராக போகிறார்கள்? என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் சுற்றிவருகிறது. சமீபத்தில் கூட நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவி வந்தன . இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது நான் கர்ப்பமாக இல்லை . கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் நானே அதனைப்பற்றி அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகசைதன்யாவும் சமந்தாவும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர். அப்போது இவர்களிடத்தில் மீண்டும் நீங்கள் எப்போது பெற்றோராக போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த நாகசைதன்யா நாங்கள் அதற்கான தேதியை குறித்து வைத்திருக்கிறோம் . விரைவில் அது நடைபெறும். அதனை பற்றிய அறிவிப்பை நாங்கள் கூறுகிறோம் எனவும் பதிலளித்திருந்தார். 

பின்னர் பேசிய நடிகை சமந்தா என்னுடைய குழந்தை பருவ வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை. குழந்தை பருவ வாழ்க்கை சரியாக அமையாத பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குழந்தைகளின் குழந்தைப் பருவம் மிகவும் அருமையாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கும் எண்ணம் உடையவர்கள் . அந்த வகையில் நானும் என்னுடைய குழந்தையின் மொத்த வாழ்க்கையும் மிகவும் அழகாக அமைத்து தரவேண்டும் எனவும் விரும்புகிறேன் . எனக்கு குழந்தை பிறந்தவுடன் என் உலகமே அந்த குழந்தைதான் என நான் இருக்க போகிறேன் . ஆகையால் எல்லாவற்றிலிருந்தும் நான் பிரேக் எடுத்துக் கொள்ளப் போகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். கூடிய விரைவில் இந்த நல்ல செய்தியை என் ரசிகர்களிடம் நான் தெரிவிப்பேன் எனவும் நடிகை சமந்தா கூறியிருந்தார்.