நீங்க என்ன ராசின்னு சொல்லுங்க! உங்க குணம் இப்படித்தான் இருக்கும்னு நாங்க சொல்றோம்! துல்லியமான கணிப்புகள் இதோ!

உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது.


ஒரு பெண்ணுக்கு அவரின் இராசியின்படி என்ன குணம் இருக்கும் என்பதை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். 

மேஷ ராசி பெண்கள் : மேஷ ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆக்கப்பு+ர்வமான சிந்தனைகள் அதிகமிருக்கும். இவர்கள் பொய் சொல்லவோ, பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள். இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். 

ரிஷப ராசி பெண்கள் : இவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் இவர்கள் மனம் திறந்து பேச ஆரம்பித்தால்தான், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது புரியும். இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

மிதுன ராசி பெண்கள் : மிதுன ராசி பெண்கள் இவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். இவர்களது உண்மையான முகம் மிக விரைவிலேயே வெளிப்பட்டுவிடும். 

கடக ராசி பெண்கள் : கடக ராசி பெண்கள் யார் மிகவும் பாசமாக இருக்கிறார்களோ, இவர்களை யார் நன்றாக கவனித்துக்கொள்கிறார்களோ அவள் மீது இவர்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள். இவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். 

சிம்ம ராசி பெண்கள் : சிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கும். இவர்களிடம் அனைத்து விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நம்பிக்கையானவர்கள். இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

கன்னி ராசி பெண்கள் : கன்னி ராசி பெண்கள் அறிவுரை சொல்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். 

துலாம் ராசி பெண்கள் : துலாம் ராசி பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் சரிசமமாக பழகுவார்கள், அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்கள் அன்பானவர்களாகவும், ஆச்சரியங்களை தருபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் காதல் மிகவும் உண்மையானதாக இருக்கும். 

விருச்சக ராசி பெண்கள் : விருச்சக ராசி பெண்கள் ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டால், அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை காதலிப்பவர்கள் இன்ப அதிர்ச்சியில் எப்போதுமே மூழ்கி இருப்பார்கள். 

தனுசு ராசி பெண்கள் : தனுசு ராசி பெண்கள் எப்போதும் சுதந்திரமாக செயல்படக்கூடியவர்கள். இவர்கள் எளிதாகவே காதலில் விழுந்து விடுவார்கள். தனக்கு என்ன தேவை என்பதை தானே முடிவு செய்து கொள்வார்கள். 

மகர ராசி பெண்கள் : மகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் எல்லோரிடமும் நட்புடன் பழகுவார்கள். நீண்ட நாள் உறவில் இவர்கள் மற்றவர்களுடன் நிலைத்திருப்பார்கள். 

கும்ப ராசி பெண்கள் : கும்ப ராசி பெண்கள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் எளிமையான குணத்தைக் கண்டு எல்லோரும் இவர்களை பாராட்டாப்படுவார்கள். 

மீன ராசி பெண்கள் : மீன ராசி பெண்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். மரியாதையாகவும், நன்றாகவும் இவர்களிடம் நீங்கள் நடந்துக் கொண்டால் அவர்களும் உங்களிடம் அவ்வாறே நடந்துக் கொள்வார்கள். இவர்களிடம் நீங்கள் தவறான நோக்கத்தில் பழகினால் எளிதில் புரிந்துக் கொள்வார்கள்.