கிருஷ்ண பகவானின் கீதோபதேசத்தின்படி இறையருள் பெற்ற மனிதன் கீழே குறிப்பிட்டுள்ள இலட்சணங்கள் உடையவனாயிருப்பான்.
இறையருள் பெற்ற மனிதனின் இலட்சணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

· இறைவனிடம் திட நம்பிக்கையுடன் ஈடுபட்டு அச்சமின்றி வாழ்தல்
· மனதில் இறைவனை அடைய வேண்டும் எனும் தீவிர வைராக்கியத்தைக் கொள்வது
· தத்துவ விளக்கத்துடன் இறைவனை அறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சம நிலையில் இருத்தல்
· சாத்வீகமான தானம் செய்தல்
· ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
· தன் கடமைகளை முறையாக செய்து வருதல்
· சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதை சொந்த வாழ்வில் செயல்படுத்துதல்
· தன் கடமைகளை செய்து வரும் பொழுது ஏற்படும் இன்னல்களை மகிழ்ச்சியுடன் பொறுப்பது
· உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும் எளிமையாக வாழ்தல்
· உடல், உள்ளம், வாக்குகளால் எந்த உயிருக்கும் சிறிதளவும் துன்பம் தராமல் இருத்தல்
· கண்டதையும், கேட்டதையும், அறிந்ததையும் உள்ளபடியே இனிய சொற்களால் சொல்லுதல்
· எவரிடமும், எதனிடமும் குரோதம் கொள்ளாதிருத்தல்
· எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்
· உலகியல் ஆசை அபிலாஷைகளை துறப்பது
· அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால் எழும் கொந்தளிப்புகளை அடக்குதல்
· கோள் சொல்லாதிருத்தல்
· எல்லா உயிர்களிடத்தும் இரக்கம், பரிவு கொண்டு பழகுதல்
· உலகியல் பொருட்களில் பேராசை கொள்ளாதிருத்தல்
· மென்மையான இதயம் கொண்டிருத்தல்
· செய்யத்தகாததைச் செய்வதில் வெட்கப்படுதல்
· சபலப்படுதல், அவசரப்படுதல் இரண்டும் இல்லாதிருத்தல்
· உடல், வாக்கு இரண்டிலும் செல் வாக்கும், பொலிவும் கொண்டிருத்தல்
· எந்த சூழ்நிலையிலும் தைரியமும் பொறுமையும் கொண்டிருத்தல்
· தண்டனை அளிக்கும் திறன் இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்
· உடலை தூய்மையாக வைத்திருத்தல்
· பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்
· உயர்வு மனப்பான்மையும் செருக்கும் கொள்ளாதிருத்தல்