இன்று ஏகாதசி திதி! எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவேண்டும் தெரியுமா?

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும். திதி பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும்.


அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில்தான் திதிகள் தோன்றுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் பதினொன்றாவது திதி ஏகாதசி ஆகும்.

அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்துவரும் ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

அந்த வகையில், ஏகாதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? போட்டி போடும் குணம் கொண்டவர்கள். கல்வி வேள்விகளில் ஆர்வம் உடையவர்கள். குருமார்களின் மீது பற்று கொண்டவர்கள். மற்றவர்கள் மதிக்கும் பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள். எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உடையவர்கள்.

வித்தியாசமான செயல்களை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். நீதியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளக்கூடியவர்கள். ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்மம் மீறியச் செயல்களை செய்வார்கள். இதுவும் சுபக் காரியங்கள் அனைத்தும் செய்ய ஏற்ற திதி தினமாகும்இத்திதியின் அதி தேவதை ருத்திரன்.

தனுஷ் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய திதி.பெருமாளை வணங்குங்கள்.