மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.
வசீகர தோற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்? இதோ அந்த ராசிக்காரர்களின் பொதுப்பலன்!

அந்த வகையில், இன்று 4-வது ராசியான கடக ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம். கடக ராசியின் அதிபதி சந்திர பகவான் ஆவார். கடக ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தின் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கும்.
கடக ராசியின் வேறு பெயர்கள் :மதி, நள்ளி, குளிர், கள்வன், சேக்கை, அலவன், நண்டு, கொண்டல், பாறப்பன் ஆகியவை கடக ராசியை குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும். இவர்கள் பெரியோர்களிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டிருப்பார்கள். கடவுள் பக்தி அதிகமாக இருக்கும். நல்ல அழகான மற்றும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். ஆளுமைத்தன்மை உடையவர்கள்.
ஞாபக சக்தியும், அறிவாற்றலும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை கவரும் ஆற்றல் கொண்டவர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். இவர்களின் மூலம் உடன் பிறந்தவர்கள் ஆதாயம் அடைவார்கள்.
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். இரக்க குணம் உடையவர்கள். எளிதில் உணர்ச்சி வசபடக்கூடியவர்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவார்கள். சேமிக்கும் பழக்கம் குறைவாக இருக்கும்.
பொது காரியங்களுக்கு உதவும் மனப்பக்குவம் கொண்டவர்கள். வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணம் ஈட்டும் திறமை கொண்டவர்கள். தனக்கு விரும்பியவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் இவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. எதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.