537 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அரிய ராசி நிகழ்வு! நிகழப்போகும் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!

537 வருடங்களுக்குப் பிறகு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள் இந்தகோள்சார அமைப்பு 25.12.19, 26.12.19, 27.12.19 மூன்று நாட்கள் நடைபெறும்.


தனுசு ராசியில் சூரியன். சந்திரன். குரு. சனி. புதன். கேது. ஆகிய கிரகங்கள் ஒன்றாக இணைந்து ராகுவின் பார்வையை பெறுகிறார்கள். இந்த அமைப்பு நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும் கோள்சார கிரக சேர்க்கை. 1482 ஆம் வருடம் வந்த இது போன்ற கோள்சார அமைப்பு மிகப்பெறும் சாம் ராஜ்யங்களையே காணாமல் போகச்செய்துள்ளது.

மனிதர்களின் மனநிலையும் புத்தியையும் வெகுவாக பாதித்துள்ளது. ஆத்மகாரகனான சூரியன், மனோகாரகனான சந்திரன், ஞானகாரகனான கேது, பாக்கியகாரகரான குரு, புத்தி காரகனான புதன். ஆயுள் காரகனான சனி இவர்கள் அனைவரும் ஒரே ராசியில் அசுப கிரகமான ராகுவின் பார்வையில் ஒரு நீள்வட்டப்பாதையில் இயங்கும் போது இந்தகிரகச்சேர்கையினால் இவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒன்றன் மேல் ஒன்று படும் பொழுது ராகுவின் கதிர் வீச்சும் இவர்கள் அனைவரின் மீதும் படிகிறது இது மிகப்பெரும் போராட்டமான அமைப்பாகும்.

இந்த மூன்று நாட்களும் பன்னிரெண்டு ராசியினரும் பதட்டம், கோபம், ரத்த அழுத்தம், சோம்பல், மனச்சோர்வு, இனம்புரியாத கலவரம், எல்லாச் செயல்களிலும் தாமதம், மறதி அதிகமாதல், என்னவென்று தெரியாத அளவிற்கு காலில் அதிக வலி ஏற்பட்டு அமைதியை கெடுக்கும் சூழ்நிலை என்று இந்த மூன்று நாட்கள் இருக்கும்.

இதில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும். கன்னி ராசியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் அவர்களுக்கு காலில் இனம் புரியாத மிகுந்த வலி ஏற்படும் மகர ராசியினருக்கு மனதில் சிந்தனைகள் மாறுபடும் .எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அனைத்திலும் சந்தேகங்களும் கருத்து வேறுபாடுகளுக்கும் ஆளாகி சண்டை சச்சரவுகளில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மிகவும் அதிகமான பாதிப்பிற்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகும் ராசி தனுசு ராசியினர் மட்டுமே.

ஆனால் இவை எதற்கும் நாம் பயப்படத்தேவை இல்லை .ஏன்னென்றால் 25.12.19 மார்கழி 9 புதன் கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தி .அன்று அமாவாசை. காலை 11.59 க்கு சூரிய கிரகணம் ஆரம்பம் 26.12.19 வியாழன் காலை 10.27 வரை அமாவாசை உள்ளது 27.12.19 வெள்ளிக்கிழமை சந்திரதரிசனம் மிகவும் விசேஷம் அன்று இரவு சந்திரனை பார்பது அபரிதமான விசேஷம். மிகவும் அதி பயங்கரமான மூன்று நாடுகளில் கடவுள் நமக்காகவே அமாவாசை, அனுமன் ஜெயந்தி, விசேஷமான சந்திர சரிசனம் போன்ற அற்புதமான நாட்களாகவும் தந்துள்ளார்.

இந்த கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பை நாம் தடுத்துவிடலாம் அதற்கு இப்பொழுது இருந்தே நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு தர்பைப்புல்லை எடுத்து ஒரு காப்பர் பாத்திரத்தில் போட்டு வைத்து அதில் நீர் ஊற்றி தினமும் குடிநீராகக் குடிக்கவேண்டும் இது அந்த சமயத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் அறவே நீக்கிவிடும். இப்பொழுது இருந்தே சுண்டல் கடலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பலம் பெறும்.

பாலில் சிறிது ஏலக்காயும் குங்குமப்பூவும் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் குடித்து விட்டு படுக்க வேண்டும். இவை அனைத்தையும் இப்பொழுது இருந்தே செய்துவர இந்த மோசமான கிரகச்சேர்கையில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். முடிந்த வரை அரிசியில் கஞ்சி செய்து அதில் சின்னவெங்காயம் பச்சையாக நறுக்கிபோட்டு குடித்துவர வாரத்தில் ஒருநாளாவது அது வியாழக்கிழமையாக இருந்தால் இன்னும் சிறப்பு. இது உடம்பிற்கும் மனதிற்கும் மிகவும் நல்லது.