வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் இன்று பரவலாக மழை இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகம் கருக்கும்! மின்னல் அடிக்கும்! மழையும் பெய்யும்! வானிலை மையம் குதூகல அறிவிப்பு!

தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. சென்னையிலும் தினமும் மாலை அல்லது நள்ளிரவு நேரத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: வளிமண்டலத்தில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகமாக குறைந்துள்ளது.
இன்னும்ஒரு சில தினங்களில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையானது 27 சதவிகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.