கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ? அறியவேண்டிய ஆன்மிகம்

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.


பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்...!

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம். சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாளை என்பது நரசிம்மருக்கு கிடையாது . துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற் பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பு. தன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் ஸ்ரீநரசிம்மர் இருப்பார்...! இதன் காரணமாகத்தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீசக்கரத்தாழ்வார்க்கென்று தனி சந்நதி உள்ளது. திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான ஸ்ரீசுதர்ன சக்கரத்தின் அம்சமான ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 விதமான ஆயுதங்களை 16 கைகளில் தாங்கி வீறுகொண்டு எழும் தோற்றத்துடன் ஆறுகோண சக்கரத்தில் பின்பக்கத்தில் யோக நரசிம்மராகவும், முன்பக்கத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாராகவும் எழுந்தருளி உள்ளார்.

இங்கு பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சக்கரத்தாழ்வாருக்கு செய்யப்படுகிறது. இவரை வழிபடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓடி எடுத்து வைத்தால், அவர் இரண்டடி முன் வைத்து பிரச்சினைகளையும் துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதி.

சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் நீங்கும். இங்கு நெய் விளக்கு ஏற்ற ஓம் நமோ பகவதே மகா எதிர்னாய நம என வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் நாளான வியாழன் அன்று சிவப்பு, மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும், வாழ்வில் சுபீட்சம் காணலாம். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சுமங்கலிகள் சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

புதன், சனிக்கிழமைகளில் துளசி சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால், பிரார்த்தனை வேண்டுதல்கள் நிறைவேறும். இங்கு கிருத்திகை தோறும் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்கின்றனர்