பட்டப்பகலில் வீட்டுக்கு வெளியே இளம் பெண்ணுக்கு 2 இளைஞர்களால் நேர்ந்த விபரீதம்.. பதை பதைக்க வைக்கும் காட்சி..

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் வீட்டு வாசலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அமைந்தகரை பகுதியில் கலெக்ட்ரேட் காலனி என்னுமிடம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இவரின் செயினை பறிக்க முயன்றனர்.

உஷா தனக்கு உதவி செய்யுமாறு கத்த தொடங்கினார். பொதுமக்கள் கூடுவார்களோ என்ற அச்சத்தில் செயின்னை வலுக்கட்டாயமாக பறித்து உஷாவை கீழே தள்ளிவிட்டனர். 

7 சவரன் தங்கச்செயின் பறிபோய் விட்ட துக்கத்தின் உஷா அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கண்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர்களே என்பதை கண்டுபிடித்தனர். அப்துல் ரஹீம் மற்றும் அஜித் குமார் ஆகிய இளைஞர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காவல்துறையினர் அவர்களை கைது செய்து திருடப்பட்ட செயினை பறிமுதல் செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.