மோடி ஆட்சியின் முதல் 100 நாள்! முதலீட்டாளர்களின் ரூ.12.5 லட்சம் கோடி அவுட்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்த 100 நாட்களில் முதலீட்டாளர்கள் 12 கோடியே 45 லட்சம் ரூபாய் இழந்துள்ள செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மையுடன் 2-வது முறை பதவியேற்றது. பதவியேற்ற நாளான மே மாதம் 30-ஆம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மொத்த பங்குகளின் மதிப்பானது 153 லட்சத்து 62 ஆயிரத்து 936 கோடி ரூபாயாக இருந்தது. 

நேற்று பாஜக அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன . நேற்றைய மொத்த பங்குச்சந்தையின் மதிப்பானது 12 கோடி ரூபாய்க்கு மேல் குறைந்திருந்தது. மொத்த பங்குகளின் மதிப்பானது  141 லட்சத்து15 ஆயிரத்து 316 கோடி ரூபாயாக சரிந்திருந்தது. 100 நாட்களில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதன் மூலம் சென்செக்ஸ் மதிப்பானது 6 சதவீதமும், தேசிய பங்குச்சந்தை குறியீடு (நிஃப்டி) மதிப்பானது 7 சதவீதமும் குறைந்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர், பல ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு சரிந்துள்ள ஆட்டோமொபைல் துறை, உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றினால் சந்தை முதலீடுகள் வராமலுள்ளன. இதேபோன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 28 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் விற்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதே அளவிற்கு கீழ்நோக்கி சென்றால், இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என்று வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.