பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு சம்மதம்!

பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


இந்திய நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் மத்திய அரசாங்கம் புதிய உத்திகளை கையாள முடிவு செய்துள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சில திட்டங்களை தீட்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்தும் நோக்கில் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ஒப்புதல் தீர்மானம் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் 53.29 சதவீதம் பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் விரைவில் அந்த நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயமாக்கும் முடிவுகளை எடுக்க போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்கும் முடிவு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.