சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கான பாஸ்ட் டேக்! ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதை நடைமுறைப் படுத்துவதற்கான கால அவகாசம் ஒரு மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்காக மத்திய அரசு பாஸ்ட் டேக் எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 15 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசு 400க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையை கொண்டு வந்தாலும் சில சுங்க சாவடிகளில் ஃபாஸ் டேக் முறையில் பல்வேறு பிரச்சினை இருப்பதாக ஓட்டுனர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஃபாஸ்ட் டேக் சிப் சந்தையில் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருவதால் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்த மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற ஜனவரி 15ம் தேதி இந்த பாஸ்டாக் முறை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.