சாலையில் கொட்டியிருந்த மணல்! திடீரென திரும்பிய ஆட்டோ..! எதிரே வந்த லாரி..! நொடியில் நேர்ந்த கோரம்! என்ன ஆச்சு?

ஆட்டோ மீது சிமெண்ட் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார். நேற்று முன்தினம் நள்ளிரவு பயனிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிக்கு வந்துள்ளார். பயணிகளை இறக்கிவிட்டு சில மணி நேரம் திட்டக்குடியிலேயே ஓய்வெடுத்துள்ளார். 

அதிகாலையில் ஆட்டோவை இயக்கி மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். போழியூர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்த பள்ளங்களை நிரப்புவதற்காக மணல் அதிகமாக நிரப்பப்பட்டிருந்தது. இதனை பார்த்தவுடன் பார்த்தவுடன் ஆட்டோவை வலது புறமாக திருப்புவதற்கு விஜயகுமார் முயற்சி செய்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக, ஆலத்தியூரிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக  கொண்டிருந்த சிமெண்ட் லாரி ஆட்டோ மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சி சில மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் விஜயகுமார் படுகாயமடைந்தார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தோர் விஜயகுமார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆட்டோ முற்றிலுமாக நசுங்கியது. மேலும் இந்த விபத்தில் சில மின்கம்பங்களும் சுக்குநூறாயின. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.