5 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை தற்போது எடுத்துள்ள முடிவு..! என்ன தெரியுமா?

பிரபல பாலிவுட் தம்பதிகளான கொங்கொனா சென் சர்மா மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோர் இருவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்துக்கு அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அறிந்த இவர்களின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


பாலிவுட்டின் பிரபல ஜோடிகள் ஆனா கொங்கொனா சென் சர்மா மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோர் விவாகரத்து என்பது பாலிவுட்டில் இதுவரை கண்டிராத விவாகரத்து ஆகும். ஏனேனில் ரன்வீரும் கொங்கோனாவும் ‘டிராஃபிக் சிக்னல்’, ‘Mixed Double’, ‘ஆஜா நாச்லே’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும், அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்தும் வந்துள்ளனர். பின்னர் இந்த காதல் திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு சில காலம் இருவரும் மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்து வந்தனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டில், கொங்கோனா மற்றும் ரன்வீர் ஷோரே இருவரும் பிரிந்ததை உறுதிப்படுத்தினர்.

 பிரிய போகுவதாக தெரிவித்த இருவரும் விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளனர். .சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் பரஸ்பர ஒப்புதலால் சட்டரீதியான பிரிவினை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொங்கோனா மற்றும் ரன்வீர் ஆகியோர் பிரிவின் காரணத்தை தெரிவிக்கும் போது அனைத்து சம்பிரதாயங்களும் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆறு மாதங்களில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொங்கோனா மற்றும் ரன்வீர் ஆகியோர் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது,

ஆனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இந்த தன்பதிக்கு ஆறு வயது கொண்ட மகன் ஹாரூனுக்கு இருகின்றான். விவாகரத்திற்கு பின்பு குழந்தையை இருவரின் குழந்தையை இருவரும் கூட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த இவர்களின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், பாலிவுட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம்.