கோவில்களில் சிறப்பு அர்ச்சணை! வாழ்த்து பேனர்கள்! அமைச்சர் மகனின் பிறந்த நாளால் அதகளப்பட்ட கடலூர்!

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மகன் பிரவீன் எந்த பொறுப்பிலும் இல்லாதபோதே அவரது பிறந்தநாளை அதிமுகவினர் "சிறப்பாக" கொண்டாடியதாக விமர்சனம் எழுந்துள்ளது.


கடலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் அவர்களின் மகன் பிரவீன் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினர். அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் அதிமுகவினர் அவரது பிறந்த நாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அவருக்காக கோயில்கள் அர்ச்சனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் அவரை வைத்து தங்களுக்கு தேவையானதை சாதித்துக்கொள்ளத்தான் என்று தொண்டர்கள் மத்தியில் சிலர் தெரிவித்தனர். இதபோல் பிரவீனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விளம்பர பதாகைகள் தயார் செய்திருந்தனர்.

அமைச்சர் மகனுக்கு அதிமுகவினரே ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடி உள்ளதாக அதிருப்தி தெரிவித்த அதிமுகவினர் முதல்வரிடம் போட்டுக் கொடுத்துள்ளனர்.