28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் காவேரி கூக்குரல் இயக்கம்! ஈஷாவின் அடுத்த சூப்பர் திட்டம்!

நதிகளை மீட்போம் செயற்குழு, "காவேரி கூக்குரல்" திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோனை கோவையிலுள்ள வேளாண் காடுகள் பண்ணையை செயற்குழு பார்வையிட்டது


நதிகளை மீட்போம் செயற்குழு கூட்டம் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், நதிகளை மீட்போம் இயக்கத்தின் அங்கமான "காவேரி கூக்குரல்" இயக்கத்தினை, அடுத்த 12 ஆண்டுகளில், காவேரி ஆற்றின் வடிநிலப் பகுதியிலுள்ள 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவது பற்றி கலந்தாலோசனை செய்யப்பட்டது.

நம் தேசத்தின் விவசாய முறைகளின் அத்தியாவசிய அங்கமாக வேளாண் காடுகள் திட்டத்தை கொண்டு வருவது பற்றியும், குறிப்பாக, காவேரி ஆற்றின் வடிநிலப் பகுதியில் இதனை செயல்படுத்துவது மட்டுமல்லாமல்,விவசாயிகள் தாங்கள் வளர்த்த மரங்களை வெட்டி, போக்குவரத்து செய்து, விற்பனை செய்யவும், சில குறிப்பிட்ட வகையிலான மரங்களை வளர்ப்பதற்கு உண்டான தடைகளை அகற்றவும், கொள்கை அளவில் தேவையான மாற்றங்களை கொண்டு வருவது குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கர்நாடக அரசுடன் இணைந்து, காவேரி கூக்குரல் இயக்கம், கர்நாடகத்தின் காவேரி வடிநிலப் பகுதியிலுள்ள 54 தாலுக்காக்களில் வேளாண் காடுகள் திட்டத்தினை துவங்கவிருக்கிறது. நதிகளை மீட்போம் செயற்குழு உறுப்பினரும், முன்னார் இஸ்ரோ தலைவருமான திரு. ஏ.எஸ் கிரண்குமார் அவர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தை பற்றி பேசும்போது, காவேரி கூக்குரல் இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார நிலையிலிருந்து செயல்பாட்டு நிலைக்கு நகர்ந்துள்ளதை பார்ப்பது மிகுந்த நிறைவினையும் மகிழ்ச்சியினையும் அளிக்கிறது.


இத்தனை பிரம்மாண்ட திட்டத்தினை இத்தனை விரிவாய் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் செயல்படுத்தக்கூடிய விதம் பாராட்டிற்குரியதாய் இருக்கிறது. இந்த இயக்கம் பெற்றுள்ள மகத்தான ஆதரவினையும், சர்வதேச அளவில் ஐ.நா சபை போன்ற மாபெரும் இயக்கங்களிடம் இது பெற்றுள்ள பெருமதிப்பினையும் நான் பார்த்து வருகிறேன்.

ஈஷாவின் செயல்பாடுகளை உன்னிப்பாய் கவனித்த ஐ.நா சபை தனது UNCCD திட்டத்தில் (பாலைவனமாவதை தடுக்கும் பணி) ஈஷாவினை இணைத்துக் கொண்டுள்ளது. விவசாயத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும், நம் மண்ணையும் நீரையும் வளப்படுத்துவது குறித்தும் சத்குரு அவர்கள் பேசுகையில்,

நம் விவசாய துறையில் நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தங்கள் என்னவென்றால், விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மரத்தை வளர்க்கவும், வெட்டவும், போக்குவரத்து செய்திடவும், அவர்கள் வளர்ப்பதை, சந்தையில் தாங்கள் விரும்பிய விலைக்கு விற்கவும் ஒரு விவசாயிக்கு விடுதலை தேவைப்படுகிறது. இதில் கட்டுப்பாடுகள் தேவையில்லை, அரசின் ஆதரவு மட்டுமே தேவை.

நம்  மண்ணையும் நீரையும் வளப்படுத்திடவும், அடுத்த தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபடவும் இந்த நடவடிக்கை மிக மிக அவசியம், என்றார். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவேரி கூக்குரல் இயக்கம் வளர்ந்துள்ள விதத்தையும், இந்த இயக்கத்தின் இயல்பை பற்றியும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும் நதிகளை மீட்போம் செயற்குழுவின் உறுப்பினரருமான திரு. அர்ஜித் பசாயத் அவர்கள் பேசுகையில், எளிமையான நிலையில் நாம் காவேரி கூக்குரல் இயக்கத்தினை தொடங்கினோம்,

ஆனால் குறுகிய காலத்தில் இந்த இயக்கம் மகத்தான தாக்கத்தினையும், மாற்றத்தினையும் ஏற்படுத்தி தீர்வுகளை வழங்கியுள்ளது. ருவாரியான மக்கள் இந்த இயக்கத்திற்கு வழங்கியுள்ள ஆதரவினையும் இதனுடன் இணைந்து செயல்படும் விதத்தினையும் பார்க்கையில், அவர்களுக்கு இந்த இயக்கம் பலன் அளிப்பதாகவும், நம்பகத்தன்மை அளிப்பதாகவும் உணர்வதை காண முடிகிறது, என்றார்.