மனிதர்கள் முக அமைப்புடன் வாழும் பூனைகள்! காண்போரை அதிர வைக்கும் சம்பவம்! எங்கு தெரியுமா?

மனிதர்களைப் போலவே முகங்களை உடைய பூனைகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகிறார். 

அவர் "மெய்ன் கூன்" என்று அழைக்கப்படும் பூனை இனத்தை வளர்த்து வருகிறார். இந்த பூனையின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பொதுவாகவே இந்த பெண்மணி பூனைகளைப் பற்றி ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர் ஆவார். மேலும் விலங்குகளின் நலனில் சிறிதும் அக்கறை காட்டும் இவர் இன கலப்பின் முலமாக புதிய ரக பூனைகளை உருவாக்கியிருக்கிறார்.

இந்த பூனைகளின் சிறப்பம்சமே அதனுடைய முகத்தோற்றம் தான். அதாவது மனிதர்களின் முகங்களை போன்று அந்த பூனையை முகங்கள் அமைந்துள்ளன. 

தற்போது அந்த பூனைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.