அநாகரீகப் பேச்சுக்காக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு..! அலறும் தி.மு.க.

தமிழகம் முழுவதும் பெண்கள் மனதில் பெரும் மதிப்பும், மரியாதையுமாக வீற்றிருக்கும் புரட்சித்தலைவியை அநாகரிகமான வார்த்தையில் அழைத்து, மக்களின் முகச்சுளிப்புக்கு ஆளானவர் ஆ.ராசா.


2ஜி வழக்கு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா, முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாகவும், தகாத வார்த்தைகளிலும் தாக்கி பேசினார். இது அதிமுகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஆ.ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தி.மு.க.வினரை அலறவிட்டிருக்கிறது. இனியாவது அமைதியாக இருப்பார்களா..?