கொரோனா + தீவிரவாதம்..! தப்லீக் ஜமாத்..! வழக்குப் பதிவு செய்து மாரிதாஸை தேடும் போலீஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரசை பயன்படுத்தி தீவிரவாதிகள் நோயை பரப்பலாம் என்று வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


வலதுசாரி சிந்தனையாளரான மாரிதாஸ் கடந்த 3ந் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரோனா வைரசை தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் ஒரு தீவிரவாதி கலந்து கொண்டிருந்தாலும் நிலைமை என்னவாகும் என்று பேசியிருந்தார்.

மேலும் தப்லீக் ஜமாத் மாநாட்டில் இருப்பவர்கள் மூலமாக இந்தியா முழுவதுமாக கொரோனா பரவி வருவதாகவும், இந்தியாவில் நோய் பரவ காரணமே ஜமாத் தான் என்றும் மாரிதாஸ் கூறியிருந்தார். மேலும் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் ஜமாத்காரர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறி மாரிதாஸ் அவதூறு பரப்பி வருவதாக நெல்லை மேலப்பாளையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாரிதாஸை தேடி வருகின்றனர். அவர் மீது 2 மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.