இப்படி ஒரு கார்ட்டூன் வரைந்தவரின் நிலை தற்போது என்ன தெரியுமா? அதிர்ச்சி தகவல்..!

பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


சமீபத்தில் திமுக எம்பிக்கள் தலைமை செயலாளரை சந்தித்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். அதில் குறிப்பாக தயாநிதிமாறன் தலைமைச் செயலாளர் தங்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார். எங்களை மூன்றாம்தர மக்களைப்போல தலைமைச் செயலாளர் நடத்துகிறார். நாங்கள்‌ தாழ்த்தப்பட்ட மக்களா? என்று விளக்கமளித்து ஆவேசமாக பேசியிருந்தார் தயாநிதிமாறன். தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக ஒப்பீடு செய்து பேசியதாக தயாநிதிமாறனின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் இந்த சம்பவத்தை மேம்போக்காக கண்டித்தார். இது தோழமை சுட்டுதல் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

திருமாவளவனின் இந்த மென்மையான அணுகு முறைக்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் கார்ட்டூனிஸ்ட் வர்மா இந்த சம்பவத்தை கண்டித்து கார்ட்டூன் ஒன்றை வரைந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த கார்ட்டூனை கண்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் இது திருமாவளவனை கிண்டல் செய்யும் விதமாக உள்ளது என போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதன் காரணமாக கார்ட்டூனிஸ்ட் வர்மாவை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை சிறையில் அடைக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. கார்ட்டூனிஸ்ட் வர்மாவின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.