முகம்மது நபிநாயகம் தொடர்பான கார்ட்டூன், பக்ரீத்தை முன்னிட்டு மதக் கலவர அபாயம்..?

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் கலவரம் உருவாக்கத் துடிக்கும் கார்ட்டூன் ஆசாமியை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய தேசிய லீக் வேண்டுகோள் வைத்துள்ளது.


கொரோனா ஆடி வரும் தாண்டவத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஒருபுறம் போராடி கொண்டிருக்கும் வேலையில், கொரோனாவை இந்தியாவில் பரவ காரணம் இஸ்லாமியர்கள் எனும் மாயதோற்றை ஏற்படுத்த முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன. தப்லீக் ஜமாத்தினர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, தற்போது அவர்கள் குணமடைந்து நலமுடன் இருப்பதால், அவர்களின் பிளஸ்மாவை பெற்று கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களை நாம் சந்தித்து வரும் வேளையில், இஸ்லாமிய –இந்து மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் சில கும்பல் சதி திட்டம் தீட்ட தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக மாரிதாஸ் எனும் நபரின் ஆதரவாளர் கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் இறைதூதர் முகம்மது நபிகள் நாயகம் தொடர்பான கார்ட்டூனை வெளியிடப்போவதாகவும், இது தொடர்பாக கலவரம் ஏற்பட்டால் அதற்கு காரணம் இஸ்லாமிய அமைப்புகளும், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் பொறுப்பு என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த கொரேனா காலகட்டத்தில் இஸ்லாமிய ஆற்றி வரும் பல்வேறு நற்பணிகளுக்கு களங்கம் ஏற்படுத்தி அவர்களை கலவரகாரர்களாக மாற்ற இதுபோன்ற செயல்களில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்டு 1-ம் தேதி பக்ரீத் எனும் ஈகை திருநாளை உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாட உள்ளநிலையில், இந்த பண்டிக்கைக்கு இன்னும் 17 நாட்கள் உள்ளதால், இந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் இந்துகளிடையே மதகலவரத்தை தூண்டும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளனர்.