கரு ஊதா நிறத்தில் சந்தைக்கு வந்த விநோத கேரட்! பீதி அடைந்த இல்லத்தரசிகள்! எங்கு தெரியுமா?

முதல் முறையாக ஊதா நிறத்தில் கேரட் விளைந்துள்ள செய்தியானது விவசாயிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், பிக்கட்டி ஆகிய மலைப்பகுதிகளில் நுண்ணீர் பாசன முறையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் விளையும் காய்கறிகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் அளவில் பலவிதமான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளில் கேரட் விளைச்சலே அதிகமாக செய்யப்படுகின்றது. 2800 ஹெக்டேர்கள் அளவில் கேரட் விளைச்சல் நிகழ்ந்து வருகிறது. விளைச்சல் அதிகமாக ஏற்படுவதால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர்.  இவ்வகையான கேரட்கள் வீரியரக கேரட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஊதா நிறத்தில் விளைகின்றன. சில ஆண்டுகளாகவே நல்ல லாபம் தருவதால் விவசாயிகள் இவ்வகையான கேரட்களை அதிகளவில் பயிரிடுகின்றனர்.

எப்1, கொரடா,எர்லி ஆகிய கேரட் விதைகளை விவசாயிகள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். இந்த வகையான கேரட் களை பயிரிடுவதற்கு 3 அல்லது 4 மாத காலமாகும். நுண்ணீர் பாசன முறையில் இவ்வகையான கேரட்கள் பயிரிடப்படுகின்றன.

இவ்வகையான கேரட்கள் முதல் முதலாக விற்பனைக்கு வந்துள்ளன. கேரட் நிறம் ஊதாவாக இருப்பதால் மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இவ்வகையான காரட்களை தற்போது அதிக அளவில் பயிரிடுவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.