வாசனைப் பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏலக்காயின் பூர்வீகம் இந்தியா. இந்த வாசனைப் பொருள்தான் அந்நியர்களை மீண்டும் மீண்டும் நம் நாட்டுக்கு வரவழைத்தது. கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் ஏலக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!

பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய் என்று இரண்டு வகை இருந்தாலும் சிறிய ஏலக்காய்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. உணவில் மணமூட்டியாக பயன்பட்டாலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன.
·
ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து, பைபர் எனப்படும் நார்சத்து, வைட்டமின் சத்துக்கள், தாது உப்புக்கள் நிரம்பியுள்ளன.
·
ஏலக்காய் வாயுவை வெளியேற்றி செரிமானத்தை தூண்டக்கூடியது. குடலின் சளி படலத்தை குளிர்விப்பதால் ஜீரணம் நன்றாக செயல்படுகிறது.
·
வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது.
·
ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.
·
ஏலம் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள் மனம் மிகவும் அமைதியடைந்துவிடுகிறது.
ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச்செய்து ரத்த சோகையை போக்கக்கூடியது என்பதால் சமையலில் ஏலக்காய் சேர்ப்பது நல்லது.