லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி மீது நேருக்கு நேர் பாய்ந்த கார்! ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி! மகளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பிய போது பரிதாபம்!

ஆந்திர மாநிலத்தில் கடப்பா எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் பிரசாத். கடந்த சில நாட்களாக இவருடைய மகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வந்தார். மேல்சிகிச்சைக்காக நேற்று மகளே பெங்களூருவுக்கு காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். மகளே மருத்துவமனையில் அனுமதித்த பிறகு கடப்பா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சின்னமான்டியம் எனும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சென்றது. பிரசாத் எவ்வளவோ முயற்சித்தும் அவனால் காரை தடுத்து நிறுத்த இயலவில்லை. சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
சம்பவ இடத்திலேயே பிரசாத்துடன் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள கடப்பா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கடப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.