பைக்கில் பந்தாவாக வந்த கல்லூரி மாணவி! சீறிப் பாய்ந்த ஸ்கார்பியோவில் மோதி ஏற்பட்ட பயங்கரம்! பதற வைக்கும் கோரம்!

மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கீர்த்தனா என்ற கல்வியியல் மாணவி வசித்து வந்துள்ளார். 18-ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற கீர்த்தனா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.

அப்பகுதியில் அமைந்துள்ள மூன்று ரோடு சாலையில் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கீர்த்தனாவின் வண்டியை ஸ்கார்பியோ ரக கார் வேகமாக வந்து மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் கீர்த்தனா தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக காரில் இருந்தோர் கீர்த்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக திருச்சியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு சொந்தமானது என்றும், அதனை அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திவந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.